சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்

சுவிஸில் மூன்றில் இருவர் அன்றாட வாழ்வில் பல மொழிகளை பயன்படுத்துகின்றனர்

சுவிட்சர்லாந்தில் மூன்றில் இருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல மொழிகளை தவறாமல் பயன்படுத்துகின்றனர்.

இவை பெரும்பாலும் தேசிய மொழிகளாக காணப்படுவதாகவும், தேசிய மொழி அல்லாதவற்றில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும்.

பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில், 66% பேர் பல்மொழி பயனர்களாக உள்ளனர் என மத்திய புள்ளி விபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வயதானவர்களை விட இளைஞர்கள், வேலை, குடும்பம் அல்லது இணையத்தில் பல மொழிகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில், 15 முதல் 24 வயதுடையவர்களில் 81% பேர் பல மொழிகளைப் பயன்படுத்துகின்றனர், இதற்கு மாறாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் வெறும் 38% பேர் மட்டுமே இவ்வாறு செய்கின்றனர்.

சிலருக்கு, பல்மொழித்தன்மை இளம் வயதிலேயே தொடங்குகிறது: 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் 38% பேர் வீட்டில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளைக் கேட்கின்றனர். ஐந்தில் ஒரு குழந்தை தங்கள் பெற்றோருடன் பல மொழிகளில் பேசுகிறது.

தேசிய மொழிகளுக்கு மேலாக, ஆங்கிலம் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மன் பேசும் பகுதிகளில், பிரெஞ்சை விட ஆங்கிலத்தை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

அதேசமயம் பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில், ஜெர்மனை விட ஆங்கிலத்தை அதிகமாகப் பேசுகின்றனர். புள்ளி விபரவியல் அலுவலகத்தின் கூற்றுப்படி, 15 முதல் 64 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆங்கில அறிவை நல்லது அல்லது மிகவும் நல்லது என்று மதிப்பிடுகின்றனர்.

பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில் ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகள் குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக உள்ளன. மறுபுறம், அல்பேனியன், போஸ்னியன், குரோஷியன், மாண்டினீக்ரின் மற்றும் செர்பியன் மொழிகள் ஜெர்மன் பேசும் சுவிட்சர்லாந்தில் அதிகம் பேசப்படுகின்றன

Share This