பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கம் வேண்டும்

”பாதாள குழுக்களை ஒடுக்குவதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை உரிய வகையில் அரசாங்கம் வழங்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தமது கடமை மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள குழுக்களை ஒடுக்க வேண்டும். இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு கொலை கலாசாரம் கோலோச்சியுள்ளது. இதனை தடுப்பதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடமெடுக்கப்படும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் நாட்டின் நிலைமை இன்று எவ்வாறு உள்ளது? எனவே, ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பிருந்தால் பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும்.
சுயாதீன விசாரணைக்கு இடமளித்து பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் அவருக்கு வேறொரு பிரதி அமைச்சு பதவியை வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும்.”- என்றார்.