இலஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல்

இலஞ்சக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல்

இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர்  எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண இந்த உத்தரவை பிறப்பித்தார்.

காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த காலத்தில், மற்றொரு நபரின் பெயரில் மூன்று தனியார் வங்கிகளில் 03 கணக்குகளைத் திறந்து இவர் 14,000,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

Share This