2025இல் இதுவரை 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 82 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று (13) இரவு 20 நிமிடங்களுக்குள் ஹன்வெல்ல மற்றும் மீகொடவில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இந்த ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 48 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட அசங்க, கோஸ் மல்லி, தெஹிபலே மல்லி, தெஹிவல சாண்டோ, காலி விதுர, கொஸ்கொட சுஜி, லொகு பெடி, கெஹெல்பத்தர பத்மே, லலித் கன்னங்கர மற்றும் கொலை செய்யப்பட்ட கணே முல்ல சஞ்சீவ ஆகியோரின் நெருங்கிய நண்பர்களால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்படுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.