துறைமுகத்தில் தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பு – விடுவிக்குமாறு கோரிக்கை

கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறுபோகத்திற்குப் பிறகு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டமை மற்றும் 2024 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக உப்பு உற்பத்தி இலங்கையில் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, இலங்கையால் உப்பு இருப்புக்களை பராமரிக்க முடியவில்லை.
இதனால் 185,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதித்தது. அதன் பிரகாரமே நாமும் உப்பை இறக்குமதி செய்தோம். என்றாலும், இவற்றை விடுவிப்பதில் பாரிய தாமதங்கள் உள்ளன.
உடனடியாக இவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.