கூலி படம் எப்படி இருக்கு?? ரசிகர்களுக்கு விருந்து அளித்ததா

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சிறப்பு காட்சி ஒன்பது மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.
கூலி திரைப்படத்தை பார்த்த் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சில கருத்துகளை இங்கு பார்ப்போம்.
கூலி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனியாளாக அவரது தோளில் சுமந்துள்ளார். மேலும் அவரது ஸ்டைல், நடிப்பு படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் வரும் ஃப்ளாஷ் பேக் பகுதி ஹைலைட்டாக அமைந்துள்ளது.
அதில் ரஜினிகாந்த் டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் இளமையாக வருகிறார். சிங்கிள் ஷாட் காட்சி அருமை. சௌபின் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பு பாராட்டுக்குறியவை. உபேந்திராவின் கேமியோ காட்சி சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
அனிருத்-இன் இசை பக்க பலமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுதிருக்க வேண்டும். லோகேஷ் படத்தில் இருக்கும் அந்த விறுவிறுப்பு இதில் சற்று குறைவே என பதிவிட்டு வருகின்றனர்.
மொத்தத்தில் கூலி திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் மற்ற மக்களுக்கு ஓரளவுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.