அநுர அரசங்கத்தின் மீது நம்பிக்கை!! உள்ளக விசாரணைக்கு ஐநா ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில், ஆணையாளரின் முன்னோடி அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா மனித உரிமைச் சபை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் 12 ஆம் திகிதியிட்ட பதிப்பிக்கப்பட்டிராத முன்னோடிப் பிரதி நேற்று புதன்கிழமை அவரது அலுவலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை மையப்படுத்தி ஜெனிவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கவுள்ள பிரேணை பரிசீலிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.
அதற்கு முன்னதாக ஆணையாளர் கையளித்துள்ள எழுத்து மூல அறிக்கையை இலங்கை அரசாங்கம் பரிசீலித்து திருத்தங்ங்களை முன்வைக்க முடியும்.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்களின் பிரகாரம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நீண்டகாலமாக இலங்கை உரிய முறையில் பொறுப்புக் கூறத் தயங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை மறுக்கவுள்ளதாகவும் இலங்கை சமர்பிக்கவுள்ள திருத்தங்களை மையப்படுத்தியே மனித உரிமைச் சபைத் தீர்மானம் அமையும் எனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை ஆணையாளர் அநுர அரசாங்கத்திடம் கைளித்துள்ள 16 பக்க அறிக்கையயில் உள்ளடக்கம் பின்வருமாறு அமைகிறது.
அதாவது, 2015 ஆம் ஆண்டு அப்போதைய ரணில் – மைத்திரி அரசாங்கம் அமெரிக்காவோடு இணைந்து ஜெனிவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றிய 301 தீர்மானம் போன்ற ஒரு நிலைமை 60 ஆம் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுவதற்கான நிகழ்தகவு, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 இல் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அறிக்கையின் ஆங்கில மொழிப் பிரயோகம் அவ்வாறுதான் காண்பிக்கிறது.
ஜேவிபி, என்பிபி எனப்படும் புதிய அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் பொறுப்புக் கூறல் விவகாரம் முழுவதையும் இலங்கையிடம் இருந்தே ஆணையாளர் எதிர்பார்க்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக வடக்கு மாகாண மக்கள் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகளவு வாக்களித்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தன் விளைவாக ஜெனிவா மனித உரிமைச் சபை அநுர அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து என்பது அறிக்கையில் தெரிகிறது.
அத்துடன் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court, ICC) இலங்கை இயல்பாகவே இணைவது நல்லது என்ற கோணத்திலும், இலங்கை கடந்தகால குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக புதிய முன்னேற்றங்கள் அமையும் என்ற வியூகத்திலும் அறிக்கையின் உள்ளடக்கம் பொதிந்துள்ளது.
இலங்கை செய்ய வேண்டிய பொறுப்புக் கூறல்கள் தொடர்பாக சிறிய சிறிய விடயதானங்கள் அடங்கிய பரிந்துரைகள் இம்முறை எண்ணுக்கணக்கில் அதிகளவாக அறிக்கையின் முடிவுரையில் காணப்படுகின்றன.
ஆனால், கடந்தகால அறிக்கைகளின் பலவற்றில் குறைந்த எண்ணுக்கணக்கில் ஆனால் கடுமையான விடயதானங்கள் கையாளப்பட்டிருந்தது போன்று இம்முறை அனுப்பப்பட்டுள்ள அறிக்கை அமையவில்லை.
மாறாக புதிய அரசாங்கத்தின் மீது ஒரு மென்போக்கையே அது வெளிப்படுத்துகின்றது. ஏற்கனவே 46-1 தீர்மானத்தை இலங்கை நிராகரித்திருந்தது. எந்த ஒரு பரிந்துரைகளும் இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை.
அதன் பின்னர் தீர்மானிக்கப்பட்ட அலுவலகப் பொறிமுறை எனப்படும் ஒஸ்லாப் (OHCHR Sri Lanka Accountability Project ) திட்டத்தைக்கூட இலங்கை உரிய முறையில் செயற்படுத்தவில்லை.
புதிய அரசாங்கம் என ஆணையாளர் நம்புகின்ற அநுர தலைமையிலான நிர்வாகம், பதவியேற்று ஒரு வருடமாகும் நிலையிலும், ஜெனிவாவின் எந்த ஒரு பரிந்துரைகளிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
இதன் காரண – காரியமாக புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் எந்தப் புள்ளியில் இருந்து வெளிப்படுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது.
பொது நியாயாதிக்கம் எனப்படும் (Universal Jurisdiction) விசாரணை முறை கூட பயனற்றது. அதாவது போர்க்குற்றவாளி எனப்படும் நபர் வெளிநாடுகளுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அங்கு வைத்து விசாரணை நடத்துவது.
இத் திட்டம் சர்வதேச விசாரணை முறையும் அல்ல. ஆனால் இத் திட்டம் பற்றிய நம்பிக்கையை ஆணையாளர் பிரஸ்தாபித்துள்ளார்.
இதனாலேயே பொது நியாயாதிக்கம் என்பதை தமிழர்கள் தமது கோரிக்கையாக முன்வைக்கக்கூடாது என்ற கருத்துருவாக்கம் தமிழ்ப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்க காலத்தில் நிலைமாறுகால நீதி என்று மார் தட்டி நம்பி எதுவுமே நடக்காத ஒரு பின்னணியில், எந்த அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிலும் புதிய அரசாங்கம் என்று ஆணையாளர் சித்தரித்து நம்பிக்கை வைக்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன.
போர்க்குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும், அதற்கான சர்வதேச விசாரணைகள் எனவும் முன்னைய அறிக்கைகளில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால், இம்முறை மனித உரிமை மீறல்கள் தொடருகின்றன என்ற கருத்தையும், பொறுப்புக்கூறலுக்கு இதுவரை இலங்கை ஒத்துழைக்காவிடினும், இனியாவது ஒத்துழைக்கவேண்டும் என்பது போலவும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படாமை பற்றியும் ஆங்காங்கே எடுத்தியம்பும் இந்த அறிக்கை பற்பல சிறிதும் பெரிதுமான குற்றச்சாட்டுகளை மாத்திரம் அறிக்கையில் முன்வைக்கிறது.
ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புக்கான சர்வதேச நீதி பற்றிய தெளிவான பரிந்துரைகள் அறிக்கையில் இல்லை.
விசேடமாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை கோருவதாகத் தமிழ்த் தேசிய பேரவை கூறியிருந்தபோதும், அந்த விடயங்கள் அல்லது தமிழ்த் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் இணைந்து கடிதம் அனுப்பியமை தொடர்பான எந்த ஒரு பதிவும் அறிக்கையில் இல்லை.
உண்மையில் இன அழிப்புக்கான நீதியை மையப்படுத்தி அந்தக் கடிதத்தை தமிழ்த் தேசியப் பேரவை வரைந்திருக்கவில்லை. அதனாற்தான் அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முடிந்துள்ளதாக சில தமிழ் அரசியல் விமசகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேசக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் என்று தொடங்கிய ஆணையாளரின் அறிக்கையிடல், தற்போது மனித உரிமை நிலைமை என்று தரம் குறைக்கப்பட்டுள்தாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை அறிக்கையின் தாக்கம் குறைவடைந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் பற்றியதாகவும் மக்களின் ஜனநாயகப் பாதுப்பு என்ற தொனியிலும் அமைந்துள்ளது.
ஆணையாளர் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு வந்தபோது யாழ் செம்மணி மனிதப் புதைகுழியையும் பார்வையிட்டிருந்தார். இதை அறிக்கையில குறிப்பிட்டபோதும், இதை ஓர் இன அழிப்புக்கான குற்றங்களில் ஒன்றாக அவர் எடுத்தாளவில்லை.
ஆணையாளர் எதிர்ப்பார்ப்பது போன்று ஐசிசி இல் இலங்கை இணைந்தாலும், 2002 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டுக்கும் இடையான குற்றங்களை அதன் அடிப்படையில் அது விசாரிக்காமல், எதிர்காலத்தில் நிகழக்கூடிய குற்றங்களைத் தண்டிக்கும் உரிமையை வழங்குவதாகவே இலங்கை வாக்குறுதி அளிக்கும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்