செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதி, சென்னை சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
செம்மணி புதைகுழி விடயத்தில் ஐநா மற்றம் நீதியான விசாரணை நடத்த வேண்டும் எனவும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றதில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.