இந்தோ – பசுபிக் விவகாரம். அமெரிக்க இந்திய அரசுகள் ஆலோசனை! வர்த்தகத்தை மேம்படுத்த திட்டம்

டொனல்ட் ட்ரமப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்க – இந்திய உறவில் நெருக்கம் ஏற்படும் என நம்பப்பட்டாலும், ட்ரம்பின் பொருளாதார வரி உயர்வுகள் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை உருவாக்கியிருந்தன.
ஆனாலும் இந்தோ – பசுபிக் விவகாரத்தை மையப்படுத்திய அமெரிக்க – இந்திய உறவில் உள்ள நெருக்கம் தொடருமென அமெரிக்காவின் பொகஸ் தொலைக்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை விமர்சனம் செய்துள்ளது.
இப் பின்புலத்தில் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்க – இந்திய அரசுகள் விரைவில் கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இராணுவ ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க – இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இப் பின்னணயில், இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தி வரும் குவாட் இராணுவ அணியின் முக்கிய தளபதிகளும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தோ – பசுபிக் பிராந்தியதை;தை மையப்படுத்திய வர்த்தக செயற்பாடுகளில் சீனா முதன்மை நிலையில் ஈடுபாட்டுவருகின்றது. அத்துடன் இராணுவ வியூகங்களிலும் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.
இப் பின்னணியில் அமெரிக்க – இந்திய அரசுகளின் கூட்டச் செயற்பாடுகள் தீவரமடையும் என சர்வதேச அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்தோ – பசுபிக் விவகாரங்களில் சீனாவின் முன்னேற்றம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்று குளோபல் ரைம்ஸ் ஆங்கில செய்தி இணையத்தில் வெளியான பின்னணியில், அமெரிக்க சார்ப்பு சர்வதேச ஊடகங்கள் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.
அதேநேரம் சீன – ரசிய பொருளாதார கூட்டான ப்ரிக்ஸ் பொருளாதார கட்டமைப்பில் இந்தியா கூடுதல் பங்களிப்பு செய்கின்ற முறைகள் பற்றியும் அமெரிக்க சார்ப்பு சர்வதேச ஊடகங்கள் விசனம் வெளியிட்டு வருகின்றன.
அதேவேளை, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சிறிய தீவான அதுவும் முக்கிய மையமான இலங்கை தொடர்பாக அமெரிக்க – இந்திய அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
அநுர அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை பேணி வரும் அமெரிக்க – இந்திய அரசுகள் இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இலங்கை தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.