இந்தியாவுக்கான அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு

இந்தியாவுக்கான அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு

ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கையை வரிகளை தவறாகப் பயன்படுத்தும் செயற்பாடு என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது மேலதிகமாக 25 சதவீத வரியை விதிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட சீன வெளியுறவு அமைச்சு பேச்சாளர், ‘கட்டணங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு சீனாவின் எதிர்ப்பு நிலையானதும் தெளிவானதும் ஆகும்’ எனவும் அவர் கூறினார். இதேவேளை, அமெரி்க்கா தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பிரச்சினைகளை அரசியலாக்குவதையும், அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தி எம்மை தீங்கிழைக்கும் வகையில் முற்றுகையிடுவதையும் நாம் முற்றாக எதிர்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This