ரத்தன தேரர் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

ரத்தன தேரர் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

தலைமறைவாகியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை, கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடுவதை தடுப்பதற்குரிய வியூகமும் வகுக்கப்பட்டுள்ளது.

2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அபே ஜனபல கட்சிக்கு தேசியப்பட்டியல் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான வேதினிகம விமலதிஸ்ஸ தேரரைக கடத்தி, பலவந்தமாக கையொப்பம் பெற்று, தேசியப் பட்டியல் வாய்ப்பை அத்துரலிய ரத்தன தேரர் பெற்றுக்கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பில் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரால் முறைப்பாடும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், ரத்தன தேரரை கைது செய்வதற்கு முற்பட்டனர்.

அவர் தங்கி இருந்த விகாரைக்கு சென்றவேளை அவர் தலைமறைவானார். அதன்பின்னர் ஏனைய பல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர் அங்கும் இருக்கவில்லை.
இந்நிலையில் தேடுதல் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.

Share This