இலங்கையின் முதற்தர பணக்காரர் யார்

இலங்கையின் முதற்தர பணக்காரராக இஷாரா நாணயக்கார இருப்பதாக கல்ப் நியூஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் முதற்தர பணக்காரராக இருந்த தம்மிக்க பெரேராவை மீறி இஷார நாணயக்கார முதலிடத்திற்கு வந்துள்ளதாக குறித்த செய்தியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் உரிமையாளரான இஷார நாணயக்கார, பல்வேறு நாடுகளில் மைக்ரோ கடன் திட்டங்கள், தேயிலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார்.
அதன் மூலம் தற்போதைக்கு அவர் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டிருப்பதாக கல்ப் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.