செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும் – சீமான்

அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு கூறியுளு்ளார்.
வாக்கை பற்றி கவலைப்படுகிற ஒருவன் மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திக்க மாட்டான். ஓட்டை குறிவைத்து வேலை செய்பவன் நாட்டை பற்றி கவலைப்பட மாட்டான்.
சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான். மக்களை பற்றி சிந்திப்பவன், மக்களை பற்றி கவலைப்படுபவன் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க அவனுக்கு நேரமும் இருக்காது, தேவையும் இருக்காது.
நாம் தமிழர் கட்சியை ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்க்க வாக்குகள் குறையும் என வதந்தி பரப்புகிறார்கள். விஜய் வருகையால் எங்களுக்கு வாக்குகள் குறையும் என தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். 2026 சட்டசபை தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும். தேர்தலில் தோற்று செத்து சாம்பல் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.
கூட்டணியில் இணைந்து நாதக தனது தனித்துவத்தை ஒருபோது இழக்காது. அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோது செய்யமாட்டேன்.
நாம் மக்களுக்கு ஆனவன்; எனது வெற்றியையும், தோல்வியையும் மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாம் தமிழர் கட்சிக்கு கூட்டணியே தேவையில்லை என தெரிவித்துள்ளார்.