தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை
Elections in Tamil Nadu 2026

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் – கட்சிகள் தீவிர ஆலோசனை

இந்தியாவின் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டு சேர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்ற வியூகங்களில் பேச்சுக்களிலும் தொகுதிப் பங்கீடுகள் பற்றியும் உரையாட ஆரம்பித்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு இன்னமும் பத்து மாதங்கள் உள்ள நிலையில், கட்சிகளிடையேயான பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் மற்றும் இடதுசாரி கட்சிகளும் கலந்துரையாடுகின்றன.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் புதிய வியூகங்களை வகுப்பதாகவும் குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக உரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுவதில் ஆர்வம் காண்பிப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This