வெகு சிறப்பாக இடம்பெற்ற வொண்டர் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

வெகு சிறப்பாக இடம்பெற்ற வொண்டர் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

கஹட்டோவிட்ட வொண்டர் கிட்ஸ் (Wonder Kids) பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு பாடசாலையின் பிரதம ஆசிரியர் நப்லியா இல்ஹாம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்றது. வொண்டர் கிட்ஸ் மாணவர்கள் அனைவரும் இவ்விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டு தங்களின் திறன்களை வெளிக்காட்டியிருந்தனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில், பாடசாலை மாணவர்கள் இரண்டு இல்லங்களாக பிரிக்கப்பட்டு, “Sun House” மற்றும் “Moon House” என இரண்டு குழுக்களாக பங்கேற்றனர்.

இது வொண்டர் கிட்ஸ் பாடசாலையின் தனிச்சிறப்பம்சமாகும். நிகழ்ச்சியின் இறுதியில், மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This