மல்லாவி மக்களுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தின் தீர்மானம்

மல்லாவி மக்களுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றத்தின் தீர்மானம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணப் போராட்டத்தில் கலந்துகொண்ட மல்லாவி வர்த்தகர்கள், மல்லாவி இளைஞர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

மாங்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நேற்று(07.08.2025) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி எஸ்.வி.தனஞ்சயன் உட்பட மூன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

இதுவொரு அமைதிப் பேரணி என்ற விடயத்தை அவர்கள் மன்றுரைத்தனர். சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த மன்று, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்குத் தவணையிட்டது.

CATEGORIES
TAGS
Share This