பற்றி எரியும் பிரான்ஸ் – இதுவரை 40,000 ஏக்கர்கள் நாசம்

பிரான்சின் எல்லைக்கு அருகே உள்ள ஆட் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் அளவிலான பகுதிகள் இதுவரை எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த காட்டுத்தீயால் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
2000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. 80 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய காட்டுத்தீ இது என அங்குள்ள அதிகாரிகள் விவரிக்கின்றனர்.
மேலும், மோசமான வானிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத்தீ ஏற்பட புவி வெப்பமடைதல் மற்றும் வறட்சியே முக்கிய காரணம் என அந்நாட்டின் பிரதமர் பிரான்கோயிஸ் பேய்ரூ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.