பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் – ஜனாதிபதி

பயங்கரவாத தடைச்சட்டம் உறுதியாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது குறித்து வேறு தரப்புகள் எமக்கு விளக்கமளிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்கமளித்தால் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.
உறுதியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும். அதேபோன்று ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.