மலையக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் – திலகர்

மலையக இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் – திலகர்

மலையக இளைஞர்கள் தமது இளைஞர் கழக உரிமைக்காக மட்டுமன்றி அதற்கு காரணமான கிராம் சேவகர் பிரிவுகளுக்காகவும் போராட முன்வர வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் எம்.பியுமான மயில்வாகனம் திலகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

மலையக இளைஞர், யுவதிகளை மாற்று திசைகளில் பயணிக்கச் சிந்திக்கச் செய்யும் வகையிலான ‘திசைகாட்டி’ அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் கண்டிக்கத்தக்கது.

மலையகத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் அதிகாரப் பதிவு, நிர்வாக அதிகாரப் பகிர்வு எனும் இரண்டு தளங்களில் தனியாகச் சிந்திக்கப்பட வேண்டியது எனும் ஆழமான பார்வையின் அடிப்படையில் பிரதேச சபை எணெணிக்கை அதிகரிப்பு, பிரதேச செயலக எண்ணிக்கை அதிகரிப்பு முதலான விடய்ங்களை முன்னிறுத்திய தாக என்னைப் போன்றவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்தன, அமைகின்றன.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. தோட்ட நிர்வாகமே பொது நிர்வாகத்தையும் பார்க்கவேண்டும் எனும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடாத்திய இலங்கை அரசு மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு ‘ அரச கிராம சேவகர் சேவகர் பிரிவுகளை வழங்கி இருக்கவில்லை ( பின்னர் எப்படி உள்வாங்கப்பட்டது இப்போது எப்படி இயங்குகிறது என்பதைத் தனியாகவும் விரிவாகவும் விளக்க முடியும்).

இந்த நிலையில் ‘கிராம சேவகர் பிரிவுகளுக்கு’ அமைவாக மாத்திரம் அன்றி அதற்கு வெளியேயும் இளைஞர் கழகங்களைப் பதிவு செய்ய முடியும் எனும் வாய்ப்பு இருந்ததால் மலையக இளைஞர் யுவதிகள் அதில் பங்கேற்று தமது வாய்ப்புகளை வளப்படுத்திக் கொண்டனர்.

பாடசாலை கல்வி முடித்த கையோடு பல்கலைக் கழகம் செல்வதற்கு முன்னர் இளைஞர் கழகம் சார்பில் மாவட்ட மட்டத்தில் கவிதைப் போட்டியிலும் ( இரண்டாம் இடம்) தேசிய மட்டத்தில் பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தையும் (1995) பெற்றமை என்னைப் போன்றவர்களுக்கு பெரும் தன்ன்ம்பிக்கையை ஏற்படுத்தியது. பின்னாளில் பாராளுமன்றம் சென்று பயமின்றி பேசும் இலக்கிய களங்களில் இறங்கிச் செயற்படும் ஊக்கத்தை எமக்குத் தந்தது.

இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒன்று எனும் முறையில் இளைஞர் கழகங்களை அமைக்கும் வகையிலான சுற்று நிருப்பத்தை வெளியிட்டதால் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர், யுவதிகள் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவ அரசாங்கங்கள் என இவர்களால் வர்ணிக்கப்படுபவர்களால் வழங்கப்பட்டு வந்த வாய்ப்பை முற்போக்கு இடதுசாரிகள் என காட்டும் அரசாங்கம் தட்டிப் பறிப்பது அசிங்கமானது மட்டுமல்ல ஆபத்தானது.

உடனடி தீர்வாக இந்த புதிய சுற்று நிருபத்தை மீளப்பெறுவதும் முன்னைய அரசாங்கங்களில் செயல்படுத்தப்பட்ட அந்த சுற்று நிருப்பத்தை செயல்படுத்துவதும் அவசியமானது.

அடுத்த கட்டமாக மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் கிராம் சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுப்பதும் ( நல்லாட்சி காலத்தில் பிரதேச சபை, பிரதேச செயலகம் அமைக்கப்பட்டதுபோல) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகளாக அமைய ழ
வேண்டும்.

மலையக இளைஞர் யுவதிகள் இந்த சுற்றுநிருப சிக்கலுக்குள் மாத்திரம் சிந்தித்து தமது போராட்டத்தை வரையறுத்துக் கொள்ளாமல் அதற்கு காரணமாக அமைந்த நிர்வாக அதிகார பகிரலாம் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிக்க கோரும் போராட்டத்தை நாடு தழுவிய ரீதியில் ( பிரதேச செயலக போராட்டத்தை மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்தது போல ) முன்னெடுக்கத் தயாராக வேண்டும். அது ஜனநாயகப் போராட்டமாக அமைதல் வேண்டும்.

Share This