இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் தொடர்பாளர் யாஹ்யா ஜாரி தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததற்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், ஏமனில் இருந்து ஹூதிகள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை திறம்பட முறியடித்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்தனர். ஏவுகணை தாக்குதல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.

காசாவில் ஐ.நா.வால் நடத்தப்படும் பாடசாலை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன், Beit Hanoun, Deir al Balah மற்றும் நுஸ்ரெட் போன்ற அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 45,028 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல்களில் 106,962 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களில் இத்தனை பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

 

Share This