ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை இரையாக இழுத்துச் செல்வதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, இரவில் வீட்டை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை என்றும், சிறுத்தை ஏற்கனவே தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பல நாய்களை இரையாக எடுத்துச் சென்றுள்ளதாகவும் மக்கள் மேலும் கூறுகின்றனர்.

எனவே, குறித்த சிறுத்தையை பிடித்து வேறு பொருத்தமான சூழலுக்கு அழைத்துச் சென்று விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள ஒரு ஆசிரியரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதோடு, மேற்படி வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )