என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல் – மெகா திட்டத்தை கையில் எடுக்கும் ஓ.பி.எஸ்.?

என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல் – மெகா திட்டத்தை கையில் எடுக்கும் ஓ.பி.எஸ்.?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை 31ஆம் திகதி ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களின் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு விலகுவதாக அறிவித்தார்.

விரைவில் தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கூறிய அவர், தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றார். மேலும், எதிர்கால கூட்டணி குறித்து காலசூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்றார்.

Share This