ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் உருவாகியுள்ள ‘INFLUENCER’ ஆங்கில திரைப்படம்

ஈழத்து சினிமா கலைஞர்களின் முழுமையான பங்களிப்பில் INFLUENCER என்ற ஆங்கில திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையின் மலையக பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
தற்போது வெளியாகியுள்ள #INFLUENCER திரைப்படத்தின் டீசர் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Teaser link 🧩 https://youtu.be/z6XWsaHf-r4?si=IVCrtDXl6m89TfoP
இந்த திரைப்படத்தினை
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் இயக்கிய “துப்பறிவாளன்” திரைப்படத்தில் பணியாற்றிய இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழர் திரைப்பட இயக்குனர் நீரோ கில்பெர்ட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், மிஷ்கினின் “பிசாசு 2” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இங்கிலாந்து வாழ் ஈழத்தமிழர் சிவ சாந்தன் இந்த திரைப்படத்தினை ஒளிப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
இந்த திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களாக இங்கிலாந்தை சேர்ந்த இரு நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்களோடு இணைந்து இலங்கையின் சிங்கள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை துலீக்க மாறப்பன அவர்களும் மலையகக் கலைஞர் நாடக நடிகர் முத்துவேல் செழியன் , மட்டக்களப்பைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர் அலோசியஸ், வவுனியாவைச் சேர்ந்த ஈழம் சினிமாச் செயற்பாட்டாளர் வனிதா சேனாதிராஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளர்.
INFLUENCER திரைப்படத்தின் நிர்வாக முகாமையாளராக மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் செல்லையா சுதர்ஷன் பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனர்களாக மலையகத்தைச் சேர்ந்த குமரவேல் தயாநீதிபாபு மற்றும் சுப்பிரமணியம் மகிழதர்ஷன், முருகானந்தன் ருஷாந்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த VS சிந்து அவர்கள் கலை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
இந்திய தமிழ் சினிமாவின் பிரபல புகைப்பட கலைஞர் ஹரிஷங்கர் ஜனார்த்தனன் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவராக கைகோர்த்துள்ளார். ஈழத்தின் சினிமா செயற்பாட்டாளர் , பல சர்வதேச விருதுகளை வென்ற இயக்குனர் காசிநாதர் ஞானதாஸ் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஏனைய துறைகளில் பணியாற்றிய கலைஞர்களின் விபரங்கள்
* படத்தொகுப்பாளர் (எடிட்டர்): சஜித் ஜெயக்குமார்
* கலை உதவி: கனிஷ்டன்
* நிர்வாக உதவி: தர்ஷி
* ஒளிப்பதிவு உதவியாளர்கள்: கமலதாஸ் நிஷாரிகன், ரவிசங்கர் டிலோஷன்
* ஒப்பனை: ரமணி உள்ளிட்ட பல இலங்கையின் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இளம் கலைஞர்கள் பலர் இந்த திரைப்படத்தின் வெற்றிக்காக உழைத்துள்ளனர்.
சர்வதேச தரம் வாய்ந்த ஒரு ஆங்கில திரைப்படத்தின் அனுபவத்தினை சினிமா ரசிகர்களுக்கு கொடுக்க படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.