“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தமிழர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நல்லூர் திருவிழா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES
TAGS
Share This