இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா – மகிழ்ச்சி வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா

இலங்கை மீதான வரியை குறைத்த அமெரிக்கா – மகிழ்ச்சி வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா

இலங்கைக்கான வரித் தொகையை அமெரிக்கா குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

இந்த வரி குறைப்பு இலங்கை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட உதவும்.

இப்போது நம்மைச் சூழ்ந்த சுவர்களை இடித்து, உலகத்துடன் பாலங்களை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This