இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், மேலதிகமாக குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவொன்றை வௌியிட்டு அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9ஆம் திகதி காலக்கெடு முடிய இருந்த நிலையில் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை நீட்டித்தார்.
அதற்கமைய, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி இன்று (30) அறிவித்துள்ளார்.