சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் – சிவஞானம் ஸ்ரீதரன்

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் – சிவஞானம் ஸ்ரீதரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

‘ தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே எமது கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக காணி பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்களைக் கொண்ட அதிகாரப் பகிர்வு வேண்டும்.

அந்த வகையிலான ஆட்சி முறைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அரசாங்கத்தோடு நாட்டுக்குள் இந்த அழகு முறையை கொண்டு வருவதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

எனினும், இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் ஒரு ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது இங்குள்ள இனங்களை ஒன்றிணைக்கின்ற எண்ணங்கள் இன்னும் உருவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This