மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – ஸ்மிருதி மந்தனா பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடம் பித்துள்ளார்.
தரவரிசையில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசியாக 2023ஆம் ஆண்டு முதலிடம் வகித்திருந்தார்.
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் 731 புள்ளிகளுடன் அவர், முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா 728 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனிடையே, இந்திய அணியின் தலைவி ஹர்மன் பிரீத் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இதன்படி, ஹர்மன்பிரீத் கவுர் 21வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கும் முன்னேரியுள்ளனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன், அவுஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர், மேகன் ஸ்கட் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தீப்தி சர்மா 4வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.