டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி

டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி

மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது தீர்மானமிக்க போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி  214 ஓட்டங்களை குவித்தது. அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், அணித் தலைவர் ஷாய் ஹோப் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ஓட்டங்களை விளாசியதுடன், ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ஓட்டங்களை குவித்தார்.

215 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. மிட்செல் மார்ஷ் 22 ஓட்டங்களுடனும், மெக்ஸ்வெல் 20 ஓட்டங்களுடனும் ஜோஷ் இங்கிலீஷ் 15 ஓட்டங்களுடனும் கேமரூன் கிரீன் 11 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து  ஆட்டமிழந்தனர்.

5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். இதனால் அவுஸ்திரேலியா அணி  16.1 ஓவரிலேயே 4 விக்கெட்களை இழந்து  215 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.  இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, தொடரையும் வென்று முன்னிலை வகிக்கிறது.

37 பந்தில் சதம் விளாசிய டிம் டேவிட், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Share This