இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்

இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்

இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காகவே இலங்கை அணி செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகளும் செப்டெம்பர் 15, 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் முறையே சௌதம்டன், காடிப் மற்றும் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளும் செப்டெம்பர் 22, 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் முறையே டர்ஹம், லீட்ஸ் மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளது.

 

Share This