மத்தள ராஜபக்ச விமான நிலையம் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மத்தள ராஜபக்ச விமான நிலையம் – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தனியார் துறையினரிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்த செயல்முறையை நெறிப்படுத்தவும், பயன்படுத்தப்படாத வசதிக்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விமான நிலைய நடவடிக்கைகளை ரஷ்ய-இந்திய கூட்டு முயற்சிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது, ஆனால் அந்த ஒப்பந்தம் பின்னர் கைவிடப்பட்டது.

இதற்குக் காரணம், அமெரிக்கத் தடைகளுக்கு ஒரு தொடர்புடைய தரப்பினர் உட்பட்டதன் காரணமாக தேசிய வான்வெளியின் இறையாண்மை குறித்து சிக்கல்கள் எழுந்ததால், அரசாங்கம் ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

இந்த நிலையில்ஈ, புதிய முதலீட்டு அழைப்பின் மூலம் பெறப்பட்ட அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் கவனமாக மதிப்பாய்வு செய்து, விமான நிலையத்தை புத்துயிர் பெற பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This