தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சம்பளம் – கிட்ணன் செல்வராஜ்

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வரையறுக்கப்பட்டுள்ளது. அப்பிரச்சினை முழுமையாக தீர்ந்த பின்னர், அவர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான பேச்சுகளில் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்ச வேதனமாக 2 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் நிச்சயம் இறங்கும்.
மலையக மக்களின் உரிமைகளில் ஒன்றான சம்பள உரிமையை எமது அரசாங்கம் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும்” – எனவும் அவர் கூறினார்.