பாகிஸ்தான் பயங்கரவாதி தங்கியிருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த இந்திய உளவுத்துறை

இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய, பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் (Gilgit-Baltistan) பகுதியில் அவர் தங்கியுள்ளதாக உளவுத் துறை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மசூத் அசார் தங்கியிருக்கும் பகுதியில் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், அரச விடுதி, மற்றும் விருந்தினர் மாளிகைகளும் காணப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.