2025 PGP – பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டிகளை கனடாவிற்கு அழைக்கும் புதிய சுற்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான, பெற்றோர் மற்றும் தாத்தா/பாட்டி நிதியுதவி திட்டத்தை (Parents and Grandparents Program – PGP)
ஜூலை 28 முதல் தொடங்கவுள்ளதாக கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை (IRCC) துறை, அறிவித்துள்ளது.
PGP என்பது கனேடிய அரசின் குடியுரிமை மற்றும் குடியேற்ற திட்டம். அதாவது, கனடாவில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா/பாட்டிகளை கனடாவிற்கு அழைத்து நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெற உதவும் திட்டம்.
குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டுக்கான சுற்றின் ஒரு பகுதியாக IRCC, 17,860 அழைப்பிதழ்களை இரண்டு வாரங்களில் அனுப்பவுள்ளது.
இது மொத்தம் 10,000 முழுமையான விண்ணப்பங்களை ஏற்கும் இலக்குடன் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ்கள் 2020-ஆம் ஆண்டு “Interest to Sponsor” படிவத்தை சமர்ப்பித்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும்.
புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
அதிக விண்ணப்பங்களை ஏற்க முடியாததால், IRCC லொட்டரி முறையை பயன்படுத்தி தேர்வு செய்கிறது. அதாவது, சமர்ப்பித்த அனைவருக்கும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அனைவரும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்.