மஸ்கெலியாவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலி

மஸ்கெலியாவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலி

மஸ்கெலியாவில் விறகு சேகரிக்க சென்ற நபரொருவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இன்று பலத்த காற்று வீசியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS
Share This