
வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா
இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் திரைப்பட சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.


CATEGORIES இலங்கை
