பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் காணாமற் போயுள்ளதாக தகவல்

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் பயணித்த மீனவர் காணாமற் போயுள்ளதாக தகவல்

சீரற்ற வானிலையால் பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகு விபத்தில் சிக்கியுள்ளதுடன் மீனவர் ஒருவர்  இன்று சனிக்கிழமை (19) காலை காணாமற் போயுள்ளார்.

விபத்தில் சிக்கிய படகில் 06 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட குறித்த படகு, இன்று மீண்டும் கரைக்கு திரும்பிய போது பேருவளை கடலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காணாமல் போன நபர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.

 

CATEGORIES
TAGS
Share This