ரூ.47 கோடி லொத்தர் பரிசு வென்றவருக்கு காசோலை

ரூ.47 கோடி லொத்தர் பரிசு வென்றவருக்கு காசோலை

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகையை வென்றவருக்கு ரூ. 47 கோடி மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், ரூ. 47 கோடியே 45 இலட்சத்து 99 ஆயிரத்து 422 சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு ஒன்றில் கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெல்லி பல்தசார் லொத்தர் பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

பிரதி மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
Share This