என்னது…கொரோனாவுக்கு தீம் பார்க்கா?
கொரோனா தொற்றை யாராலும் மறக்க இயலாது. அந்த வகையில் அதனை நினைவுகூறும் விதமாக வியட்நாமில் தீம் பார்க் ஒன்று உருவாக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது.
தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இத் தீம் பார்க்கின் கரு கொரோனா ஆகும்.
கொரோனாத் தொற்று பரவிய காலத்தில் அதனால் ஏற்பட்ட அச்சுறுத்தல்களை பிரதிபலிக்கும் வகையிலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை விபரிக்கும் வகையிலும் இத் தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.