இறைவனை வழிபடும்போது கொட்டாவி வருதா?

இறைவனை வழிபடும்போது கொட்டாவி வருதா?

நம் மனதில் இருக்கும் குறைகளை நீக்கவும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் வேண்டுதல் செய்வோம். இறைவனை வேண்டும்போது சில நேரங்களில் கொட்டாவி வருவது, கண்களிலிருந்து கண்ணீர் வருவது, சாமி சிலையிலிருந்து பூ விழுகுதல் போன்றன நடக்கும்.

இவ்வாறான செயல்கள் நடக்கும்பொழுது அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் சிந்திப்போம். அதற்கான பலன்கள் என்னவென்று இப்போது பார்ப்போம்.

அந்த வகையில் கோயிலிலோ அல்லது வீட்டிலோ இறைவனை வழிபடும்போது கண்களில் கண்ணீர் வந்தால், இறைவனுக்கும் எமக்கும் ஆழமான பிணைப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

இன்னும் சிலருக்கு இறை வழிபாட்டில் ஈடுபடும்போது கொட்டாவி வரும். இதற்கான காரணம், எதழிர்மறை அறிகுறியாகும். உடலிலுள்ள எதிர்மறை விடயம் கொட்டாவியாக வெளிப்படுகிறது.

அதேபோல் வேண்டுதல் செய்யும்போது கடவுள் சிலை மீதிருந்து மலர்கள் விழும். நாம் செய்யும் வேண்டுதல் விரைவாக நிறைவேற்றப்படும் என்று அர்த்தம்.

அந்த வகையில் சாமியின் இடப் பக்கம் பூ விழுந்தால் நமது வேண்டுதல் நிறைவேறும் ஆனால், கால தாமதம் ஆகும் என்று அர்த்தம்.

சாமிக்கு நேராக இருக்கும் பூ கீழே விழுந்தால், நமது முயற்சி அதிகம் வேண்டும் என அர்த்தம் கொள்ளப்படும்.

வழிபாட்டில் ஈடுபடும்போது மணி ஓசைக் கேட்டால், நமது கோரிக்கையை இறைவன் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம்.

Share This