கொள்கலன்கள் விடுவிப்பு – விசாரணை அறிக்கை விரைவில்

கொள்கலன்கள் விடுவிப்பு – விசாரணை அறிக்கை விரைவில்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக எந்த அரசியல் தலையீடும் அல்லது அரசியல் தேவையும் இல்லை என்று கூறிய பிரதி அமைச்சர், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக துல்லியமான பதில்களைப் பெறுவதற்காக எதிர்காலத்தில் குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )