திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்

திருகோணமைலை – அலஸ்தோட்டம் பகுதியில் வெளிநாட்டவரக்ளை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணை விரும்பத்தகாத முறையில் தொட முயன்ற உள்நாட்டவரை, குறித்த வெளிநாட்டுப் பெண்ணின் கணவர் எச்சரித்துள்ளார்.
இதன்போது குறித்த வெளிநாட்டவரை சந்தேகநபர்கள் இருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக உப்புவெளி காவல்துறையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் ஜூலை 21 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் தற்போது பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாக உள்ளார், மேலும் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.