பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

பங்களாதேஷூக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஒரு வருடமாக இலங்கை அணியில் இடம் பெறாத முன்னாள் தலைவர் தசுன் ஷானக மற்றும் இரண்டு வருடங்களாக அணியில் இடம் பெறாத முன்னாள் சகலதுறை வீரர் சமிக கருணாரத்ன ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தொடரின் முதல் போட்டி ஜூலை 10ஆம் திகதி பல்லேகலே சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவு்ளளுது.
இரண்டாவது போட்டி ஜூலை 13ஆம் திகதி தம்புள்ள ஜாதியதன் மைதானத்திலும், இறுதிப் போட்டி ஜூலை 16 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி விபரங்கள்…
சரித் அசலங்க (தலைவர்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமல், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, சமிக கருணாரத்ன, மதீஷ பத்திரன, நுவன் ஷாரா, பினுர பெர்னாண்டோ மற்றும் எஷான் மலிங்க