இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள்,  வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறிய பின்னர் பேக்கரிகளில் பணிபுரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இணக்கப்படை உறுதிப்படுத்த வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை இஸ்ரேல் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இஸ்ரேல் வெளிநாட்டு பணியாளர்களை அவர்களது விசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலைகளில் இணைவதை
தடை செய்வதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

நுழைவுக்குப் பின்னர் இதுபோன்ற விசா வகை மாற்றங்களுக்கு எந்த சட்ட விதிகளும் இல்லை என்று இஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு பராமரிப்பு பணிக்காக வந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது வேலை நிலைமைகளை மீறியதற்காக நாடு கடத்தப்பட்டார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவைப் பேணுவதற்கு தொழிலாளர்கள் தமது ஒப்பந்தக் கடமைகளை கடைப்பிடிக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Share This