பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

பாதாள உலகக் கும்பல் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

போதைப்பொருள் கடத்தற்காரரும் பாதாள உலகக் கும்பல் தலைவருமான நதுன் சிந்தக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிக்குன்குன்யா நோய்காரணமாக சிகிச்சை பெறுவதற்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மற்றும் விசேட படையினரின் பாதுகாப்புடன் நதுன் சிந்தக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது ஏராளமான குற்றச்சாட்டுகளில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, தாக்குதல், வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாட்டில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை
போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அவர் மடகாஸ்கரில் இன்டர்போலால் கைது செய்யப்பட்டு மார்ச் 15, 2023 அன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

 

Share This