கல்லூரி பாடப்புத்தகத்தில் – நடிகர் மம்முட்டியின் வரலாறு

கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘மலையாள சினிமாவின் வரலாறு’ என்ற பெயரில் மம்முட்டியின் 50 ஆண்டு கலைப்பயணம் ஒரு பாடமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் என்ற கௌரவம் மம்முட்டிக்கு இதன் மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
இது மம்முட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்களும் சமூக வலைதளங்களில் மம்முட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.