யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) 11:30 மணியளவில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மாமுனை பகுதி முழுவதும் ஒரு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பின் போது, 38 பொதிகளில் 71 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஆனால், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This