மலைப்பாம்புகளை உடலில் மறைத்து தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் கைது

மலைப்பாம்புகளை உடலில் மறைத்து தாய்லாந்துக்கு கடத்த முற்பட்ட இலங்கையர் கைது

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் மூன்று பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து கடத்த முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மூன்று மலைப்பாம்புகள் இவ்வாறு குறித்த இலங்கையரின் உடலில் மறைத்து கடத்த முற்பட்டுள்ளதாக தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரை தாய்லாந்து வனவிலங்கு அமுலாக்க வலையமைப்பு (WEN) கைது செய்துள்ளது.

அனுமதியின்றி வனவிலங்குகளை ஏற்றுமதி செய்ய முயன்றால் சந்தேக நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் பாட் (US$30,900) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This