வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்” என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமாகும். இத் திட்டத்தில் பொருளாதாரம், சமூக நலம், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் அடங்கும். இந்தத் திட்டத்தின் நோக்கம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் ஆகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.