ஓமந்தையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து

வவுனியா ஓமந்தை பறநாட்டான்கல் பகுதியில் இன்று (02.07.2025) காலை 9.30மணியளவில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிலில் பயணித்தவர்கள் ஏ9 வீதியிலிருந்து பறநாட்டான்கல் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் 20 நிமிடங்கள் தாமதத்துடன் புகையிரம் கொழும்பு நோக்கி பயணித்தது.
விபத்து இடம்பெற்ற இவ் புகையிரத கடவை ஒர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும் என்பதுடன் எச்சரிக்கை பாதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன